நடிகர் சிவா, பிரியா ஆனந்த், யோஷினோரி டஷிரோ, வி.டி.வி. கணேஷ், யோகி பாபு நடிக்கும் திரைப்படம் சுமோ.
இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின் இயக்கிய இத்திரைப்படத்தினை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று படத்தின் ட்ரெய்லரை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆ. ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இன்று சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு ட்ரெய்லர் வெளியானது. ஜப்பான் நாட்டிலிருந்து நினைவிழந்த நிலையில் கடற்கரையோரம் கண்டெடுக்கப்படுகிறார் யோஷினோரி டஷிரோ. தன்னை பற்றிய எந்த விவரமும் இல்லாதவர் சிவாவின் கைகளைப் பற்றிக்கொண்டு விடாமல் இருக்கிறார். அவர் யார் அவர் பின்புலம் என்ன என்பதை மையப்படுத்தியதே இரண்டு நிமிடம், 37 வினாடி ஓடும் டீசரில் தெரிகிறது.
எல்கேஜி, கோமாளி, பப்பி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க : அகில உலக சூப்பர் ஸ்டாரின் 'சுமோ' - புது அப்டேட்