தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பப்பி'யை விட்டுவைக்காத ஜானி சின்ஸ் நித்யானந்தா! - யோகி பாபு

நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவாகிவரும் புதிய படமான 'பப்பி' திரைப்படத்திற்கு தற்போது பிரச்னை கிளம்பியுள்ளது.

puppy

By

Published : Aug 20, 2019, 3:22 PM IST

இயக்குநர் முரட்டுச் சிங்கிள் (நட்டு தேவ்) இயக்கத்தில் நடிகர் வருண் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பப்பி'. இப்படத்தில் வருணுடன் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் ஜானிசின்ஸ் என்ற அடல்ட் திரைப்பட நடிகர் ஒரு பக்கமும் இன்னொரு பக்கத்தில் நித்தியானந்தாவும் இருக்கின்றனர்.

இப்போது இந்த போஸ்டரால் படத்திற்கு எதிராக பிரச்னை கிளம்பியுள்ளது. சிவசேனா அமைப்பைச் சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

சிவசேனா புகார்

அதில், அமெரிக்காவில் அடல்ட் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் ஜானி சின்ஸ் என்பவரையும் இந்து மத பரப்புரைகள் போதனைகள் வழங்கும் சுவாமி நித்யானந்தாவையும் இணைத்து பப்பி படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர்.

இது இந்து மனதை புண்படுத்தும் வகையிலும் இளைஞர் மனதில் வக்கிர எண்ணங்களையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எனவே சர்ச்சைக்குரிய காட்சிகளை வெளியிட்டுள்ள படக்குழுவினர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details