தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை சக்கரவர்த்தியாக வலம்வந்தவர் கவுண்டமணி. இவர் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரம் அனைவரிடமும் இணைந்து நடித்துள்ளார்.
இதனையடுத்து உடல்நிலை காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகப் படங்களில் நடிக்காமலிருந்த, கவுண்டமணி கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ‘வாய்மை’ படத்தில் நடித்திருந்தார். பிறகு ஒரு சில நிகழ்ச்சியில் மட்டுமே, கலந்துகொண்ட இவர், வெளியில் வருவதைத் தவிர்த்துவருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென நேற்று (ஆகஸ்ட் 23) கவுண்டமணியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "இது மிகவும் மகிழ்ச்சியான, சிறப்பான தருணம். இந்த நாள் என்னுடைய நினைவில் எப்போது இருக்கும். ஆல் டைம் பேவரைட்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் எதற்காக இந்தச் சந்திப்பு, இவர்கள் ஏதாவது படங்களில் இணைந்து நடிக்கவுள்ளனரா அல்லது வேறு எதுவும் காரணம் இருக்கிறதா எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.