லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் ரஜினி நடித்துவருகிறார். இந்நிலையில் ‘சிறுத்தை’ சிவா, ரஜினியை அவரது போயஸ் தோட்டத்து இல்லத்தில் வைத்து சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் நுழைந்த சிறுத்தை? - சிவா
ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் வைத்து இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்தியின் ’சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. அதன்பிறகு அஜித்தை வைத்து, ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ’விஸ்வாசம்’ என வரிசையாக இயக்கிவந்தார். இதில் ‘விவேகம்’ படம் மட்டும் எதிர்பார்த்த அளவு சரியாக ஓடவில்லை, மற்ற படங்கள் எல்லாம் வணிக ரீதியாக வெற்றிபெற்றது. சிறுத்தை சிவா முன்பே ரஜினியிடம் கதை சொன்னதாக செய்திகள் பரவி வந்தன. அந்த வேளையில்தான் ‘பேட்ட’ அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு ரஜினி ‘தர்பார்’ படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார்.
தற்போது ரஜினி வேறு எந்த கதைக்கும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில், சிறுத்தை சிவா ஸ்கிரிப்ட்டோடு ரஜினியை சென்று சந்தித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கமர்சியலை விரும்பும் ரஜினி, சிறுத்தை சிவா கதையை நிச்சயமாக தேர்ந்தெடுப்பார் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கிறது.