தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிங்கிள் ஷாட் காட்சி ரசிகர்களின் கவனத்திற்கு... தமிழில் ஓர் உலகத்தர முயற்சி! - இயக்குநர் சாம் ஆண்டன்

ப்ரமோத் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25ஆவது திரைப்படமான அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தின், அசரவைக்கும் சிங்கிள் ஷாட் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டது.

அதர்வா முரளி
அதர்வா முரளி

By

Published : Apr 1, 2021, 1:26 PM IST

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் ஒரு பெருமதிப்பு இருக்கிறது. சிங்கிள் ஷாட் திரையில் நிகழ்த்தும் மேஜிக்கை, மொழி, இனம் கடந்து உலகம் முழுக்கவே திரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கொரியன் படமான Oldboy, மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917, புகழ்பெற்ற த ரெவனண்ட் (The Revenant), த ரெய்டு (The Raid) படத்தொடர் ஆகியவை இதுபோன்ற ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் காட்சிகளைக் கொண்ட திரைப்படங்கள். இதற்காகவே இவை உலகம் முழுக்க கொண்டாடப்பட்டும் வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை இம்மாதிரியான முயற்சிகளை எவரும் தீவிரமாக எடுத்ததில்லை. இந்நிலையில், முதல் முறையாக ப்ரமோத் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25ஆவது திரைப்படமாக உருவாகிவரும் அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் புதிய படத்தில் இந்த முயற்சி நடந்தேறியுள்ளது. ரசிகர்களை வாய்பிளக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சியாக, இக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குநர் சாம் ஆண்டன் இக்காட்சி குறித்து கூறியதாவது.

”இது எனது நீண்ட நாள் கனவு, முயற்சி. நானும் திலீப் சுப்பராயன் மாஸ்டரும் பல காலம் முன்பாகவே இப்படி ஒரு ஆக்‌ஷன் காட்சியை எடுக்கத் திட்டமிட்டோம். இப்படத்தில் அக்கனவு நிறைவேறியுள்ளது. அதுவும் சுறுசுறுப்பும் உத்வேகமும் நிறைந்த அதர்வா முரளி போன்ற நாயகன் அமைந்ததால்தான் இது சாத்தியமானது. சிங்கிள் ஷாட்டில் ஒரு ஆக்‌ஷன் காட்சியை திட்டமிட்டு எடுப்பது மிக சவாலானதாக இருந்தது. திட்டமிட்ட பிறகு ஒரு நாள் மட்டுமே நாங்கள் ரிகர்சல் செய்தோம்.

ஆக்‌ஷன் காட்சி படப்பிடிப்புத் தளம்

படக்குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய அயராத உழைப்பால் இக்காட்சி அற்புதமாக வந்துள்ளது. இப்படத்திற்கு பிறகு அதர்வா இந்திய அளவில் புகழ்மிக்க நடிகராக மாறிவிடுவார்” என்றார்.

தொடர்ந்து இது குறித்து பிரமோத் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா கூறியதாவது:

இந்த ஆக்‌ஷன் காட்சி, சினிமாவில் ஆக்‌ஷன் படங்களுக்கே ஒரு பெரும் மைல்கல்லாக இருக்கும். நடிகர் அதர்வா அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு, அவரது உழைப்பு போற்றப்பட வேண்டியது. இந்த அற்புதமான காட்சியை வடிவமைத்ததற்கு திலீப் சுப்பராயன் மாஸ்டர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் காட்சியை மிக அழகாக படம் பிடித்ததில் ஒளிப்பதிவுக் குழுவினரின் பங்கு மிகப்பெரியது.

ஆக்‌ஷன் காட்சி படப்பிடிப்புத் தளம்

இவையனைத்திற்கும் தலைமை வகித்த, மிகப்பெரும் கற்பனை திறன் மிக்க இயக்குநர் சாம் ஆண்டன் அவர்களுக்கும் பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களின் Pramod Films சார்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த ஆக்‌ஷன் காட்சி, உலக சினிமா வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஷங்கர் படங்களை இயக்க தடைவிதிக்க முடியாது - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details