தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஊதியம் இல்லாமல் குறும்படத்தில் நடித்த பாடகர் வேல்முருகன்! - Latest Cinema news

கரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் பாடகர் வேல்முருகன் ஊதியம் பெற்றுக்கொள்ளாமல் நடித்துள்ளார்.

வேல்முருகன்
வேல்முருகன்

By

Published : Jun 8, 2020, 11:00 PM IST

‘சுப்ரமணியபுரம்’ படத்தில் வெளியான மதுர குலுங்க என்ற பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பாடகர் வேல்முருகன். இதனையடுத்து அவர் திரைப்படங்களிலும், நாட்டுப்புற மேடைகளிலும் தனது பங்களிப்பை கொடுத்துவரும் சூழலில், தற்போது கரோனா நோய் குறித்து ஒரு விழிப்புணர்வு குறும்படத்தில் ஊதியம் இல்லாமல் நடித்து கொடுத்துள்ளார்.

‘பச்சை மண்டலம்’ என்று பெயரிடப்பட்டுள்ள குறும்படத்தை கைஷோ கிரியேஷன்ஸ் சார்பில் ஷில்டன் தேவராஜ் இயக்கியுள்ளார். கரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமான மனிதர்களை நாம் ஒதுக்கி வைக்கவோ, புறக்கணிக்கவோ கூடாது என்றும், அவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி நடத்த வேண்டும் என்பதையும் உணர்த்தும் வகையில் இக்குறும்படம் அமைந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details