இந்தியில் வெளியான ஆண் என்ற திரைப்படம் தமிழில் ‘ஆண் முரட்டு அடியாள்’ என மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டது. இப்படத்தில் வரும் பாடல்களை லதா மங்கேஷ்கர் தமிழில் பாடினார். இப்படம் 1953 ஆம் ஆண்டு வெளியானது. அப்போதே தமிழில் இவர் அறிமுகமாகிவிட்டார்.
இந்தி நடிகர் திலீப் குமாரின் நடிப்பில் ‘உரன் கடோலா’ என்ற திரைப்படம் 1955ஆம் ஆண்டு வெளியானது. அப்படம் தமிழில் ‘வான ரதம்’ என மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டது. நவ்ஷத் இசையில் ’எந்தன் கண்ணாளன்’ பாடலை கம்பதாசன் எழுதிய வரிகளில் பாடினார்
இசையமைப்பாளர் இளையராஜா அழைத்து வந்தார்
அதன்பின்னர் தமிழ் பக்கமே வராமல் இருந்த லதாவை மிண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் இசையமைப்பாளர் இளையராஜா. நடிகர் பிரபு நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான ‘ஆனந்த்’ என்ற படத்தில் ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலைப் பாடினார்.
இளையராஜா இசையில் இப்பாடல் அனைவரையும் கவர்ந்தது. இதுவே இவர் நேரடியாக தமிழில் பாடிய முதல் பாடல். பின்னர் 1956ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான, ‘சத்யா’ படத்தில் ‘வளையோசை’ பாடலை பாடினார். இதுகுறித்து யாருக்கும் விளக்கம் தேவையில்லை, ஏனென்றால் இன்றுவரை பலரது ஃபேவரிட் லிஸ்டில் இப்பாடல் உள்ளது.
இளையராஜாவிடன் லதா மங்கேஷ்கர் பாடகர் மனோவுடன் இணைந்து ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலை ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் பாடியுள்ளார். 1988ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் பாடல்கள் சுகமான ராகங்களாக பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. இப்பாடல்கள் அனைத்துமே இளையராஜாவின் இசையாகும். அதற்குபிறகு அவர் தமிழ் படங்களில் பாடவில்லை.
மேலும் இவர், தமிழ் சினிமாவின் முக்கிய பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன் ஆகியோருடன் இந்தியில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
இதையும் படிங்க: பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்; 2 நாள் துக்கம் அனுசரிப்பு