தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்; 2 நாள் துக்கம் அனுசரிப்பு - லதா மங்கேஷ்கர் மரணம்

லதா மங்கேஷ்கர் காலமானார்
லதா மங்கேஷ்கர் காலமானார்

By

Published : Feb 6, 2022, 9:55 AM IST

Updated : Feb 6, 2022, 12:37 PM IST

09:53 February 06

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முதுபெரும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று (பிப். 6) காலமானார். அவருக்கு வயது 92.

மும்பை: லதா மங்கேஷ்கர், நிமோனியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு ஜன.8ஆம் தேதி கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், ஜன.28ஆம் தேதிவரை வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வெண்டிலேட்டர் சிகிச்சை நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரின் உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து, நேற்று (பிப். 5) மிகவும் கவலைக்கிடமானதால், மீண்டும் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (பிப். 6) காலை அவரது உயிர் பிரிந்தது. லதா மங்கேஷ்கரின் இறப்பு செய்தியை அவரது தங்கை உஷா மங்கேஷ்கர் உறுதிசெய்தார்.

தேசிய துக்கம் அனுசரிப்பு

நாடு முழுவதும் இன்றும், நாளையும் (பிப். 7) இரண்டு நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், இரண்டு நாள்கள் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.

நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதை (2001) பெற்றுள்ள லதா மங்கேஷ்கர், 1999ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இறுதி மரியாதை

லதா மங்கேஷ்கரின் உடல் மருத்துவமனையில் இருந்து மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு மதியம் 12.30 மணியளவில் கொண்டுசெல்லப்படுகிறது. பின்னர், மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை 6. 30 மணியளவில் இறுதி மரியாதை நடைபெறும். மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, லதா மங்கேஷ்கரின் இறுதி மரியாதை முழு அரசு மரியாதையுடன் என அறிவித்துள்ளார்.

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நாள்கள் தேசிய அளவிலான துக்கம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

இதையும் படிங்க: கானக் குயில் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

Last Updated : Feb 6, 2022, 12:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details