தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இசைஞானிக்காக புயலாக கிளம்பி வந்த ஜேசுதாஸ்! வைரல் புகைப்படம் - இசைஞானி இளையராஜா

விஜய் ஆண்டனி நடிக்கும் 'தமிழரசன்' படத்தில் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பத்து ஆண்டுகளுக்கு  பிறகு மீண்டும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

ஜேசுதாஸ்

By

Published : Apr 16, 2019, 5:36 PM IST

Updated : Apr 16, 2019, 5:42 PM IST

இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் 'தமிழரசன்'. எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நடிகை ரம்யா நம்பீசன், நடிகர் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குநர் மோகன்ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதிரடி ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவை படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.

தற்போது, பாடலாசிரியர் ஜெயராம் எழுதியிருக்கும், 'பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா' என்ற புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாட இளையராஜா இசையமைத்திருப்பதால் படக்குழுவினர் வியந்து ரசித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த பழசிராஜா படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதன் பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் விலகியிருந்தார். தற்போது 'தமிழரசன்' படத்தில் ஜேசுதாஸ் பாடியது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மரியாதை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஜேசுதாஸுக்கு பூங்கொத்து கொடுத்து இசைஞானி இளையராஜாவும், படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரனும் வரவேற்ற புகைப்படம் வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இசைஞானி-கே.ஜே.ஜேசுதாஸ்
Last Updated : Apr 16, 2019, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details