தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’ஒரு சகாப்தம் முடிந்தது’ - பாடகி சித்ரா உருக்கம்! - பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து பாடகி சித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளர்.

பாடகி சித்ரா
பாடகி சித்ரா

By

Published : Sep 26, 2020, 6:15 PM IST

சென்னையில் உள்ள மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் முதல் சிகிச்சைப் பெற்றுவந்த எஸ்.பி.பி. சிகிச்சைப் பலனின்றி நேற்று (செப். 25) உயிரிழந்தார். அவரின் மறைவு குறித்து திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி.பி. மறைவு குறித்து பாடகி சித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில், “ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. இசை ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது. உலகம் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது.

ஒரு சிறந்த பாடகராக என்னை வழிநடத்திய உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. சாவித்ரியம்மா, சரண், பல்லவி, குடும்பத்தினருக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கூட்டத்தில் விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்!

ABOUT THE AUTHOR

...view details