நாகர்கோவிலை பூர்விகமாகக் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளியான கோமகன், சென்னை மாதவரத்தில் உள்ள தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது இசைக் கச்சேரிகளையும் நடத்தி வந்தார்.
‘பூ உதிர்ந்தது’ - பிரபல பாடகர் கோமகன் மறைவு - ''ஒவ்வொரு பூக்களுமே''
'ஆட்டோகிராஃப்' படத்தில் வரும் 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் மூலம் உலகளவில் புகழ்பெற்றவர் பாடகர் கோமகன். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலமானார்.

கோமகன் மறைவு
சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் அவருக்கு அரசு வேலை கிடைத்தது. 2019ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது இவருக்கு கிடைத்தது.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு ஐசிஎப் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கோமகன், இன்று (மே.6) அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு இயக்குநர் சேரன் உட்பட திரைப்பிரலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Last Updated : May 6, 2021, 10:20 AM IST