நடிகர் அருண்விஜய் ’என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் திருப்புமுனை கண்டு, தற்போது சிறந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். கடந்த மார்ச் மாதம் அவர் நடித்து வெளியான ‘தடம்’ திரைப்படமும் ரசிகர்களிடம் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது. ’துருவங்கள் பதினாறு’ படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் ‘மாஃபியா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
'சினம்' கொண்ட 'பாரி வெங்கட்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - சினம் கதாபாத்திரம்
அருண்விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'சினம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.
பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கத்தில் அருண்விஜய் தனது 30ஆவது படமான 'சினம்' படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக பாலக் லால்வானி நடித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்து வருகிறார்.
தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். இதில் அருண் விஜய் 'பாரி வெங்கட்' என்னும் கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சினம் படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து #SinamFirstLook என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.