இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாஃபியா’ படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கத்தில் சினம் என்னும் படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்.
'சினம்' இரண்டாம் கட்ட பணி நிறைவு! - அருண்விஜய்யின் சினம்
அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சினம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
arun vijay
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருந்தார். இதில் அருண் விஜய் 'பாரி வெங்கட்' என்னும் கதாபாத்திரத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் அக்னி சிறகுகள், பாக்ஸர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.