திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார் இடுப்பழகி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட சிம்ரன். 90களின் இறுதியிலும், 2000ஆவது ஆண்டில் தொடக்கக் காலத்திலும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம்வந்த இவர், சமீபத்தில் இளைஞர் ஒருவருடன் இடுப்பை வளைத்து நெளித்து நடனமாடிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
சமூக வலைதளங்களை அவ்வப்போது பயன்படுத்திவந்த சிம்ரன், தற்போது அடுத்தடுத்து நாள்களில் புதிய பதிவுகளைப் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு, மே அவுர் மேரி ஹவியாஷின் என்ற பெயரில் தனது புதிய மியூசிக் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் அளித்தார்.