தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சோட்டி சர்டார்னி தொடரிலிருந்து விலகியது ஏன்? மனம்திறந்த சிம்ரன் சச்தேவ் - சிம்ரன் சச்தேவ்

நடிகை சிம்ரன் சச்தேவ் தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால் சோட்டி சர்டார்னி தொடரிலிருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.

சோட்டி சர்டார்னி
சோட்டி சர்டார்னி

By

Published : Jun 3, 2020, 8:42 PM IST

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் சோட்டி சர்டார்னி. இதில், கதாநாயகியாக நடிகை சிம்ரன் சச்தேவ் நடித்து வந்தார். இவர், திடீரென்று அத்தொடரில் இருந்து விலகினார். எதற்காக விலகினார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை சிம்ரன் சச்தேவ் அத்தொடரில் இருந்து விலகினேன் என்பது குறித்து பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், "இத்தொடரின் தயாரிப்பாளர் திடீரென்று என் சம்பளத்தில் இருந்து 40 சதவீதத்தை குறைத்தார். அதேபோன்று எனக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் இத்தொடரில் தயாரிப்பாளரான ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அதனால்தான் அத்தொடரில் இருந்து விலகினேன்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details