சென்னை: கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள குறைந்தது 20 விநாடிகளாவது கைகழுவ வேண்டும் என்று கூறியுள்ள நடிகை சிம்ரன், கைகழுவும் முறையைக் காணொலியாக வெளியிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் குறித்து விழப்புணர்வை ஏற்படுத்திவரும் திரை பிரபலங்களின் வரிசையில் தற்போது நடிகை சிம்ரன் காணொலி ஒன்றை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில், சீரான இடைவெளியில் குறைந்தது 20 விநாடிகளாவது உங்களது கைகளை சரியான முறையில் கழுவுங்கள். இதை நாம் அனைவரும் ஒன்றிணைந்துசெய்து கரோனா வைரசை விரட்டிவிடலாம் எனப் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, #SafeHands Challenge என்ற ஹேஷ்டாக்கில் கைகளைக் கழுவி சுத்தமாக இருப்பதன் அவசியத்தையும், கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வதன் அவசியத்தையும் காணொலி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துமாறு பல்வேறு பிரபலங்களிடம் உலக சுகதார அமைப்பு கேட்டுக்கொண்டது.
இதையடுத்து தீபிகா படுகோனே, அனுஷ்கா ஷர்மா போன்ற பாலிவுட் பிரபலங்கள் சுத்தமாகக் கைகழுவி அதைக் காணொலியாக வெளியிட்டனர். அத்துடன் மற்ற பிரபலங்களை டேக் செய்தும், இதைச் செய்யுமாறு #SafeHands Challenge என்ற ஹேஷ்டாக்கில் சவால்விடுத்தனர். இது தற்போது சங்கிலிபோல் பரவிவருகிறது.
இதைத்தொடர்ந்து தென்னிந்திய திரைத் துறையில் டாப் நடிகையாக வலம்வந்த சிம்ரன், தற்போது கைகழுவும் முறையைக் காணொலியாக வெளியிட்டுள்ளார்.