மூன்றாவது முறையாக சிம்பு-கெளதம் மேனன் கூட்டணி அமைத்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. சிம்புவின் 47ஆவது படமான இதை ஐசரி கணேஷ் தயாரித்துவருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்ற புதினத்தை மையமாகக் கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்திற்காக சுமார் 15 கிலோ வரை சிம்பு உடல் எடையைக் குறைந்துள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தமிழ்த் தயாரிப்பாளர் சங்கத்தினர் சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுத்து ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு நடத்த தடைவிதித்தனர். அதன்பின் சிம்பு தரப்பில் நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததால், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடை விலக்கப்பட்டது.
இந்நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு சிறிய அறைக்குள் 6 முதல் 7 நண்பர்கள் வரை ஒன்றாக உள்ளனர். சிம்பு ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருப்பதுபோல் இடம்பெற்றுள்ளது. அப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: எனக்கா ரெட் கார்டு - சிம்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்