சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, எஸ்.ஏ.சி. சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி அமரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றன.
முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், ஹைதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நீண்ட நாள் ஷெட்யூலில் திட்டமிட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.
இதற்கிடையில் கரோனா காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் மாதம் மீண்டும் புதுச்சேரியில் சித்த மருத்துவரின் மேற்பார்வையில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு நடைப்பெற்றுவருகிறது.
இந்த நிலையில், இன்று (நவ.21) படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டரில் சிம்பு கழுத்தில் அணிந்திருக்கும் செயினின் டாலர் முடிவில்லா தன்மையை குறிக்கும் வகையிலும் 'மாநாடு' எழுத்தில் ரீப்பிட் மோடையும் ஞாபகப்படுத்தும் வகையில் உள்ளது.
அதுமட்டுமல்லாது சிம்புவின் நெற்றியில் குண்டுடன் தலையிலிருந்து ரத்தம் வழிய தொழுகை செய்வது போன்று 'அப்துல் காலிக்' என்று அவரது கதாபாத்திரத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.