சென்னை: சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரன் ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு - ஈஸ்வரன்
சிம்பு உடல் மெலிந்து புதிய கெட்டப்பில் இருப்பதால், அவரது ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நந்திதா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளன. இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பொங்கலையொட்டி ஜனவரி 14ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. சிம்பு உடல் மெலிந்து புதிய கெட்டப்பில் இருப்பதால், அவரது ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.