சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான 'கசட தபற' திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
சிம்புதேவன் இயக்கத்தில் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் மற்றும் ஆர். ரவீந்திரனின் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'கசட தபற'. இதில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், சாந்தனு பாக்யராஜ், பிரியா பவானி சங்கர், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ரெஜினா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆறு கதைகள். எல்லாக் கதைகளும் ஒன்றுக்குக்கொன்று தொடர்புபடுத்தப்பட்ட திரைக்கதை அம்சத்துடன் உருவாகியிருந்தது இந்தப் படம்.
ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், படக்தொகுப்பாளர், இசையமைப்பாளர் என புதுமையாக அமைந்திருந்த 'கசட தபற' திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது.