சென்னை: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டர் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படப்படிப்பின் போது சிம்பு புல்லட் ஓட்டும் புகைப்படமும், சிம்பு சட்டையில்லாமல் செல்ஃபி எடுப்பது போன்று இன்று (ஆக. 13) வெளியான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.
சிம்பு, இரண்டாண்டுகளுக்கு முன்வரை சற்று உடல் பருமான காணப்பட்டதற்கு பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.
என்றும் மன்மதன்
'வந்தா ராஜாவா தான் வருவேன்', 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் சிம்புவின் தோற்றம் சமூக வலைதளங்களில் பலராலும் பகடி செய்யப்பட்டது.
சிம்பு தற்போது உடல் எடையைக் குறைத்த பின்னர், அட்மேன், மாநாடு, நதிகளிலே நீராடும் சூரியன், வெந்து தணிந்தது காடு என திரைப்படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன.
சிம்பு ட்வீட்
இந்நிலையில், சிம்பு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரின் பழைய புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். சிம்புவின் இந்த சேஞ்ச்-ஓவர் ட்வீட்டை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 100 மில்லியனைக் கடந்து அடிச்சி தூக்கிய தல அஜித் பாடல்..!