90'ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான காம்போக்களில் யுவன்-சிம்பு கூட்டணியும் ஒன்று. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் யுவன் இசையமைத்த வல்லவன், மன்மதன், சிலம்பாட்டம் உள்ளிட்டப் படங்களில் சிம்பு பாடியுள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
இந்நிலையில் யுவன் தயாரித்துள்ள இண்டிபெண்டென்ட் பாடல் ஒன்றை நடிகர் சிம்பு பாடியுள்ளார். 'தப்பு பண்ணிட்டேன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் பாடலில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.