விஜய் சேதுபதி விஜயுடன் நடித்து பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இதனையடுத்து விஜய் சேதுபதி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக இருந்த வெங்கட கிருஷ்ணா இயக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தில் நடித்துவருகிறார்.
விஜய் சேதுபதிக்குப் பாட்டு பாடும் சிம்பு? - யாதும் ஊரே யாவரும் கேளீர் பட அப்டேட்
சென்னை: விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Simbu
இசக்கி துரை தயாரிக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ், விவேக், இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ்திருமேனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.