தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திடீர் ட்விஸ்ட்...'மாநாடு' ஒப்பந்தம்... மலையேறும் சிம்பு! - ஐப்பனுக்கு மாலையிடும் சிம்பு

மீண்டும் 'மாநாடு' படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நடிகர் சிம்பு பின் சபரி மலை ஐப்பனுக்கு மாலையிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

simbu

By

Published : Nov 4, 2019, 10:02 PM IST

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் 'மாநாடு'. ஆனால் சில காரணங்களால் அப்படம் கை விடப்பட்டதாகவும், விரைவில் புதிய சில மாற்றங்களுடன் தொடங்கும் என மாநாடு படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார்.

இப்படத்தில் சிம்புக்கு பதில் வேற ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்புளர் முடிவு செய்திருந்தார். இந்த வேளையில் மகா மாநாடு என்னும் புதிய படத்தை சிம்புவே இயக்கி நடிக்க இருந்தார். ஆனால் தற்போது மீண்டும் மாநாடு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை தற்போது தீர்க்கப்பட்டதையடுத்து சிம்பு இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், சிம்பு ஐப்பனுக்கு மாலை போட்டு 40 நாட்கள் விரதம் இருந்து மலைக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ’எங்க வீட்டு வேலன்’ படத்தில் மாலையிட்ட சிம்பு பின் தற்போதுதான் மாலையிட உள்ளார்.

சமீப காலமாக சிம்புவின் கவனம் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியுள்ளது. காசி, இமயமலை என அவர் ஆன்மீக ட்ரிப்படித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க: இது யாரு நம்ம சிம்புவா? கேஜிஎப் ஹூரோவா? - ஆளே மாறிட்டேள் சிம்பு!

ABOUT THE AUTHOR

...view details