தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சமூக வலைதளங்களில் ரீ-என்ட்ரி கொடுக்கும் எஸ்டிஆர்! - latest kollywood news

சென்னை : நடிகர் சிம்பு சமூக வலைதளங்களில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு
சிம்பு

By

Published : Oct 21, 2020, 2:37 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரக வலம் வருபவர் எஸ்டிஆர் என அழைக்கப்படும் சிம்பு. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்களிலிருந்து தற்காலிகமாக விலகினார். அவர் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையானதை அடுத்து, சிம்பு தற்காலிமாக சமூக வலைதளங்களிலிருந்து விலகுவாக அறிவித்தார். மேலும் மீண்டும் தேவைப்பட்டால் சமூக வலைதளங்களில் தான் இணைவேன் என்றும் சிம்பு அப்போது அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் அறிவித்தது போல் தற்போது சிம்பு மீண்டும் சமூக வலைதளங்களில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள காணொலி பதிவில், “அக்டோபர் 22ஆம் தேதி காலை 9.09 மணி முதல் சிம்பு சமூக வலைதளங்களில் மீண்டும் களமிறங்குகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:’துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து ஏன் விலகினேன்? - அதிதி ராவ் ஹைதாரி விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details