தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

STR New Year Wish 2022: `உங்களில் ஒருவன் - சிலம்பரசன் புத்தாண்டு வாழ்த்து - சிலம்பரசன் புத்தாண்டு வாழ்த்து

STR New year Wish: 2022 ஆம் புத்தாண்டிற்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

STR new year wishes  STR released statement  சிலம்பரசன் புத்தாண்டு வாழ்த்து  உங்களில் ஒருவனாக பார்த்துக்கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
சிலம்பரசன் புத்தாண்டு வாழ்த்து

By

Published : Jan 1, 2022, 7:20 PM IST

சென்னை: STR New year Wish:சிம்பு புத்தாண்டை ஒட்டி வெளியிட்ட அறிக்கையில், "என் பாசத்திற்குரிய அனைவருக்கும்.. வணக்கம்.

நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம். பலர் வாழ்க்கையின் எல்லையை தொட்டு மீண்டிருப்பர். இழப்பையும், நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்திருக்கிறோம். இறைவனின் பெருங்கருணையால் இந்த புதிய வருடத்தை காணவிருக்கிறோம்.

தனிப்பட்ட முறையில் மாநாடு படத்தை மிகப்பெரிய வெற்றியாக பரிசளித்த ஆண்டு இவ்வாண்டு. 01/01/2022 மிக பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021 ஆண்டை முடிக்கிறேன். 2022 ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும் உங்களுக்கும் அமைய வேண்டிக்கொள்கிறேன்.

என்னை எப்போதும் உங்களில் ஒருவனாக பார்த்துக்கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரையுலக சொந்தங்களுக்கும், என்றென்றும் எனக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடக பெருமக்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நலமே வாழ்க. நீங்க இல்லாம நான் இல்ல. என்றும் அன்புடன் உங்கள் சிலம்பரசன்" இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க:புத்தாண்டு தின விதி மீறல்- சென்னையில் 269 வழக்குகள் பதிவு

ABOUT THE AUTHOR

...view details