தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிம்பு பட தலைப்பை வெளியிட்ட பத்து இயக்குநர்கள் - லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகள்

சென்னை: சிம்பு, கௌதம் கார்த்திக் நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பை தமிழ் சினிமாவின் 10 இயக்குநர்கள் வெளியிட்டுள்ளனர்.

சிம்பு
சிம்பு

By

Published : Dec 24, 2020, 2:10 PM IST

’சில்லுனு ஒரு காதல்’ பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துவருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு இன்று (டிச. 24) வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அறிவித்தப்படி படத்தின் தலைப்பை தமிழ் சினிமாவின் 10 இயக்குநர்கள் வெளியிட்டுள்ளனர். ‘பத்து தல’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

இது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியதாவது, “ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் இப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சிம்பு அதீதமான சுறுசுறுப்புக்கும், உற்சாகத்திற்கும் பெயர்பெற்றவர். இவர் தற்போது தன்னையே முழுதாக மாற்றி வேறொரு பரிணாமத்தில் படு உற்சாகமாக வந்து நிற்பது, பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

இத்திரைப்படம் முடிவான உடனேயே அவரது கதாபாத்திரத்தை ஒட்டி, மிகச்சரியான, அதிரடியான தலைப்பை தேடினோம். பல்வேறு பெயர்களைப் பரிசீலித்த பின்னால் ’பத்து தல’ என்ற தலைப்பு உறுதிசெய்தோம். ரசிகர்கள் படம் பார்க்கும் தலைப்பின் அர்த்தத்தை அதன் ஆழத்தைப் படம் வழியே கண்டிப்பாக உணர்வார்கள்.

கௌதம் கார்த்திக் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துடன் ஏற்கனவே பணிபுரிந்துள்ளார். எங்களைப் பொறுத்தவரையில் அவர் எங்கள் குடும்பத்தில் ஒருத்தர். ’பத்து தல’ படத்தில் அவரது கதாபாத்திரம் வெகு கனமானது.

திரையுலகின் பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில், மேலும் பல ஆச்சர்யங்களும் இணையவுள்ளது. அது பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details