லாக் டவுன் காலத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய குறும்படத்தில் நடித்த சிம்பு, அதன்பின் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. இதனையடுத்து சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
ஹாலிவுட் லெவல் லுக்கில் "ஆச்சரிய" சிம்பு!
நீண்ட முடி, மீசை, தாடியுடன் கோட்ஷூட் அணிந்து ஹாலிவுட் லெவலில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திற்கு பின் உடல் எடை கூடிய சிம்பு சமீபத்தில், அதனை குறைத்து பழைய நிலைக்கு திரும்பி வந்து ரசிகர்களை ஆச்சரியப்படவைத்தார். சமூகவலைதளத்தில் கணக்கை தொடங்கிய சிம்பு அவ்வபோது புகைப்படங்கள், பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துக் கொண்டே இருக்கிறார். சமீபத்தில் தனது தாயார் பரிசளித்த காரில் சென்ற வீடியோவை வெளியிட்டிருந்தார்.
தற்போது நீண்ட முடி, மீசை, தாடியுடன் கோட்ஷூட் அணிந்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் லெவலில் இருப்பதாக கூறி சிம்புவை பாராட்டி வருகிறார்கள். அதுமட்டுமல்லாது சமூகவலைதளத்தில் இதனை ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.