தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்திற்கு சிக்கல்! - சம்பள பிரச்சினை

சம்பள பிரச்சினை காரணமாக சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

s
s

By

Published : Mar 10, 2022, 2:53 PM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘மாநாடு’ படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்ததன் மூலம் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார். இதனால் சிம்புவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்துவிட்டதால் தன்னோட சம்பளத்தையும் பெரிய அளவில் உயர்த்தியுள்ளார்.

ஆனால் ‘மாநாடு’ படத்திற்கு முன்னரே ஐசரி கணேசனின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் மூன்று படங்களில் நடிக்க கமிட் ஆகி இருந்தார் சிம்பு. இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார்.

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்திற்கு சிக்கல்

இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையை அடுத்து கோகுல் இயக்கத்தில் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் முன்னர் போட்ட ஒப்பந்தபடி நடிக்க முடியாது என்றும், மார்க்கெட்டிற்கு ஏற்ப புதிய சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்றும் சிம்பு தரப்பு கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகவும், இதனால் திட்டமிட்டப்படி ‘கொரோனா குமார்’ திரைப்படம் உருவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதையும் படிங்க:போலீஸ் பாதுகாப்புடன் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம்

ABOUT THE AUTHOR

...view details