'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து, வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் 'மாநாடு'. ஆனால் சில காரணங்களால் அப்படம் கை விடப்பட்டதாகவும், விரைவில் புதிய சில மாற்றங்களுடன் தொடங்கும் என மாநாடு படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார்.
இப்படத்தில் சிம்புக்கு பதில் வேற ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்புளர் முடிவு செய்திருந்தார். இந்த வேளையில் மகா மாநாடு என்னும் புதிய படத்தை சிம்புவே இயக்கி நடிக்க இருந்தார். ஆனால் தற்போது மீண்டும் மாநாடு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை தற்போது தீர்க்கப்பட்டதையடுத்து சிம்பு இப்படத்தில் நடிக்கவுள்ளார்.