சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி அமரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து வருகின்றது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நீண்ட நாள் ஷெட்யூலில் திட்டமிட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.
வெளியானது சிம்புவின் 'மாநாடு' டீசர்! - சிம்புவின் மாநாடு
சென்னை: சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் கரோனா பெருந்தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் மாதம் மீண்டும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளான இன்று (பிப்.3) மாநாடு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை ஏ.ஆர். ரஹ்மான், பிரித்விராஜ், கிச்சா சுதீப், அனுராக் காஷ்யாப் போன்ற பல்வேறு மொழி பிரபலங்கள் வெளியிட்டனர். டீசர் வெளியான உற்சாகத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.