வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ட்ரெய்லர்
'மாநாடு' தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. 2.09 நிமிடம் ஓடும் ட்ரெய்லர் 'யுவர் டைம் ஸ்டார்ட் அகைன்' என சிம்பு பேசுவதுடன் தொடங்குகிறது.