தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிம்பு, கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் பிரமாண்ட பட்ஜெட் படம் - studio green

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் முதன் முறையாக நடிகர் சிம்பு, கெளதம் கார்த்திக் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது.

சிம்பு, கெளதம் கார்த்திக்

By

Published : Apr 21, 2019, 5:20 PM IST

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திற்கு பிறகுநடிகர் சிம்புஇயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்காக வெளிநாட்டிற்கு சென்று உடல் எடையை குறைக்கும் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

எனவே வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சிம்பு 'மாநாடு' படத்தின் மூலம் அரசியல்வாதியாக களம் இறங்க இருக்கிறார். அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்னைகளில் தனது சொந்தக் கருத்துகளை தெரிவித்துவரும் இவர், 'மாநாடு' படத்தில் முழு நீள அரசியல்வாதியாக அதுபோன்ற பிரச்னைகளை பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கான கதைத் தேர்வு, அனைத்தும் முடிந்துள்ளதால் அடுத்த மாதம் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட இயக்குநர் நார்தன் இயக்கும் இப்படத்தில் முதன் முறையாக நடிகர் சிம்பு, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்க இருக்கின்றனர். இந்த அதிகாரப்பூர்வ தகவலை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மிக பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து வருகின்றனர். மேலும், படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு, கெளதம் கார்த்திக்

ABOUT THE AUTHOR

...view details