தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

என்னை நீங்க பார்த்துக்கோங்க - ரசிகர்களிடம் கண்ணீர்விட்ட சிம்பு - வெங்கட் பிரபுவின் மாநாடு

மாநாடு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிம்பு கண்ணீர்விட்டு அழுது பேசிய புகைப்படங்கள், காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

சிம்பு
சிம்பு

By

Published : Nov 18, 2021, 1:21 PM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாநாடு' (Maanaadu). இதில் எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ.சி., கல்யாணி பிரியதர்ஷன், மனோஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த நிலையில் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினால் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மாநாடு படத்தின் ப்ரீ ரிலீஸ் (Maanaadu Pre Release) நிகழ்ச்சி இன்று (நவம்பர் 18) சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, "தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் வணக்கம். சிம்பு படம் என்று சொன்னாலே சாதாரணமாகவே பிரச்சினை வருகிறது.

சிம்பு

வெங்கட் பிரபுவுடன் படம் செய்ய வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. ஒரு இனத்திற்கு மேல்வரும் பழியை யாராவது தட்டிக் கேட்க வேண்டும், அவர்தான் அப்துல் காலிக் என்று ஒருவரிதான் படம் குறித்து வெங்கட் பிரபு என்னிடம் கூறினார். அது எனக்குப் பிடித்ததால் படத்திற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டேன்.

எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது, நிறையப் பிரச்சினைகளைச் சந்தித்துவிட்டேன். நிறையப் பிரச்சினைகள் கொடுக்கிறார்கள். அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மட்டும் நீங்க பார்த்துக்கோங்க (தனது ரசிகர்களைப் பார்த்து)" என்றார். கடைசியில் ரசிகர்களைப் பார்த்துப் பேசுகையில், வேதனைதாளாது கண்ணீர்விட்டார்.

தீபாவளியன்று சன் பிக்சர்ஸின் 'அண்ணாத்த' தவிர வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

இதையும் படிங்க:'நவம்பர் 25 தான் தீபாவளி...' - எஸ்.ஜே.சூர்யா ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details