சிம்பு கடைசியாக சுந்தர். சி இயக்கிய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் தோன்றினார். தனது தாய்லாந்து பயணத்தை முடித்து திரும்பியுள்ள சிம்பு, கௌதம் கார்த்திக்குடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.
பின்னர் ’மகா மாநாடு’ பட வேலைகளில் பிஸியாக வலம்வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்துக்காக கூட்டணி அமைத்த இயக்குநர் பாண்டிராஜ், சிம்பு உடனான நட்பை பற்றி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பாண்டிராஜ், சிம்பு இன்றும் எனக்கு நெருங்கிய நண்பர்தான். சிம்புவை பற்றி ஒரே ஒரு வருத்தம் உள்ளது. அவருடைய தகுதிக்கு அவர் இருக்க வேண்டிய இடமே வேறு, ஆனால் சாதாரணமான இடத்தில் இருக்கிறார் என்றார்.
மேலும் அவர், என்னுடைய ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் க்ளைமேக்ஸ் போர்ஷனை பார்த்து சிம்பு மிகவும் கண்கலங்கிவிட்டார். எனக்கு கால் செய்து எனக்கும் இதுபோன்ற குடும்பத்தில் இருக்க வேண்டும் என தோன்றுவதாகச் சொன்னார். சீக்கிரமே அதுபோன்ற ஒரு திரைப்படம் நாம பண்ணலாம் என சிம்புவிடம் சொன்னேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'மாநாடு' போனா என்ன...'மகாமாநாடு' நடத்த இருக்கும் சிம்பு