நடிகர் சிம்பு தற்போது 'மாநாடு' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 9ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
லாக் டவுனில் உடல் எடை குறைத்த சிம்பு எப்போதும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக செயல்படுகிறார். சமீபத்தில் சமையல் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் அவர் சமையல் செய்யும் வீடியோவை இதுவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பத்து மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
சிம்பு வீடியோ படைத்த சாதனை இதன்மூலம் இன்ஸ்டாவில் ஒரே வாரத்தில் பத்து மில்லியன் பார்வையைக் கடந்த முதல் இந்திய நடிகர் என்ற சாதனையைச் சிம்பு படைத்துள்ளார். இதனைச் சிம்பு ரசிகர்கள் #10mviewsinstaindiaclub என்ற ஹேஷ் டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:'மோகன்தாஸ்' படத்தில் தனது பகுதியை முடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!