பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சென்னயில் உள்ள பிரபல மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவரின் மறைவு குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் சிம்பு பாடகர் எஸ்.பி.பி. மறைவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எத்தனை ஆயிரம் பாடல்கள்?? பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்?? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன். சாதாரணமான பாடகர் இல்லை நம் எஸ்.பி.பி. இந்த உலகில் துயரமானவர்களை மகிழ்விக்க. காலத்தால் அவதியுற்றோர்களை அரவணைத்துக் கொள்ள. உலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்.
என் குடும்பத்திற்கும் அவருக்குமான நிகழ்வுகள் மறக்க இயலாதவை. என் தந்தை கம்போஸ் பண்ண பாடும் நிலா பாட வந்திருந்தார். குட்டிப் பையன் நான் ரெக்கார்டிங் பண்ண அமர்ந்திருந்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால் பாட மறுத்திருப்பார்கள்.