தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிம்புக்கு ஜோடியான இயக்குநரின் மகள் ..! - actress kalyani priyadharshan

"மாநாடு" படத்தில் நடிகர் சிம்புக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்யாணி பிரியதர்ஷன்

By

Published : Mar 29, 2019, 9:49 PM IST

நடிகர் சிம்பு "வந்தா ராஜாவாதான் வருவேன்" படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக சில வருடங்களாக பேச்சுக்கள் அடிபட்டன. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை 9ஆம் தேதி வெங்கட்-சிம்பு கூட்டணியில் 'மாநாடு' படம் உருவாகிறது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

அரசியலை மையமாக வைத்து பிரமாண்ட செலவில் உருவாகும் இப்படத்தை சுரேஷ்காமாட்சி தயாரிக்கிறார். 'மாநாடு' படத்தின் மூலம் அரசியல்வாதியாக களம் இறங்கும் சிம்பு தனது உடல் எடையை குறைக்க வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி யார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

'மாநாடு' படத்தில் பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணி பிரியதர்ஷன் சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details