சிம்பு வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "அன்புத் தம்பியும் காதல் அழிவதில்லை படத்திலிருந்து என்னோடு கூட இருந்து வரும் சகோதரனுமான குட்லக் சதீஷை அகாலத்தில் இழந்திருக்கிறேன். உன்னை இழந்துவிட்டதை நம்பமுடியாமல் தவிக்கிறேன்.
குட்லக் சதீஷ் மறைவிற்கு சிம்பு இரங்கல் - oodluck Satish killed by Corona
எஸ்டிஆர் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த அகில இந்திய மாநிலச் செயலாளர் குட்லக் சதீஷ் கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாது தவிக்கிறேன். நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி. அவசரப்பட்டு விட்டாய். போய் வா சகோதரா. அழுகையோடு வழியனுப்பி வைக்கிறேன். சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல இன்னொருவரை இழக்க விரும்பவில்லை.
ரசிகர்களே, நண்பர்களே, நோய்வாய்ப்பட்டால் தயவு செய்து நிலை குலையாதீர்கள். பயம்தான் நம்மை வீழ்த்துகிறது. சாதாரண நோயைத் தீவிர நோயாக்குவதும் பயம்தான். தயவு செய்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையில் மருத்துவ சிகிச்சை செய்து கொள்வோம்" என்று கூறியுள்ளார்.