வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த படம் மாநாடு. ஆனால் சில காரணங்களால் அப்படம் கை விடப்பட்டதாகவும் விரைவில் புதிய சில மாற்றங்களுடன் தொடங்கும் என மாநாடு படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார்.
மாநாடு படம் கைவிடப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த வெங்கட் பிரபு, “துரதிர்ஷ்டவசமாக எனது சகோதரர் சிம்புவுடன் மாநாடு படத்தில் இணைந்து பணியாற்ற முடியவில்லை. எல்லாவற்றிற்கும் காலம் மிக முக்கியமானது.