சைமா தென்னிந்திய சினிமாவை உலகளாவிய தரத்திற்கு கொண்டுசென்று தென்னிந்திய நடிகர்களுக்கு சர்வதேச தளத்தை ஏற்படுத்தித் தருகிறது. இந்நிலையில், பான்டலூன்ஸ் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா முதன்முறையாக கத்தாரில் நடைபெறவிருக்கிறது.
இதில் இந்திய சினிமாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். ஆகஸ்ட் 15, 16ஆம் தேதி சைமா விழா நடைபெறவுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் நடிகை ஆண்ட்ரியா பிரபல நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட பலரும் கவுரவ விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்ச்சி தோகாவிலுள்ளலுசெயில் அரங்கில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தெலுங்கு, கன்னடம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.
திரைப்பட விருதுகள் தவிர, தென்னிந்திய வர்த்தக சாதனையாளர்களை பாராட்டும் வணிக விருது விழா ஆகஸ்ட் 14ஆம் தேதி தோகாவில் நடைபெறும்.
இந்த விழாவில், '96', 'கோலமாவு கோகிலா', 'வடசென்னை', 'பரியேறும் பெருமாள்' ஆகிய படங்கள் பரிந்துரையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.