தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எதற்காக அறுவைச் சிகிச்சை? - உண்மையை உடைத்த சித்தார்த் - சித்தார்த் உடல்நிலை

லண்டனிலிருந்து அறுவைச் சிகிச்சைமுடிந்து நலமுடன் சித்தார்த் ஹைதராபாத் திரும்பியுள்ளார்.

சித்தார்த்
சித்தார்த்

By

Published : Oct 1, 2021, 5:42 PM IST

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்துவருபவர் சித்தார்த். இவர் இயக்குநர் அஜய்பூபதி இயக்கத்தில் மகாசமுத்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில் சித்தார்த் கலந்துகொள்ளாதது ஏன் எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் படத்தின் இயக்குநர், அஜய்பூபதி அவருக்கு லண்டனில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றுவருவதல், வரவில்லை என்று தெரிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் எதற்காக அவருக்கு அறுவைச் சிக்கிசை? என்ன நடந்தது? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் லண்டனிலிருந்து திரும்பியுள்ள சித்தார்த் அறுவை சிகிச்சை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "உங்களின் அன்புக்கு மிக்க நன்றி. நான் ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது, முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுவிட்டது. அதனால் தான் லண்டனில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.

மருத்துவர்கள் சில மாதங்கள் ஓய்வில் இருக்க அறிவுரை வழங்கியுள்ளனர். நல்ல காலம் எனக்கு வலுவான முதுகெலும்பு உள்ளது. உங்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்துவிட்டேன். ரசிகர்களுடன் சேர்ந்து படத்தைக் காண ஆவலாக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தற்போது ஹைதராபாத்தில் படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஒடிடியில் வெளியானது கவினின் லிப்ட்!

ABOUT THE AUTHOR

...view details