கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் தவிர மற்ற அனைத்து கடைகள், மால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் சில படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ரிலீஸ் நேரத்தில் தியேட்டர் கிடைக்குமா என்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது. அதனால், படங்களை நேரடியாக OTT-யில் வெளியிட சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அந்தவகையில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'டக்கர்' திரைப்படத்தை நேரடியாக அமேசான் பிரைமில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'கப்பல்' பட இயக்குநர் கார்த்திக் ஜி.கிருஷ் இயக்கியுள்ள இப்படம் ரொமான்டிக் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது.
மேலும் 16.5 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள 'டக்கர்' படத்தை, அமேசான் பிரைம் நிறுவனம் ரூபாய் 17.5 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:'நல்லோர் சிந்தனைகளைப் படிக்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை'- சூர்யா