ட்விட்டரில் எப்போதும் சமூக கருத்துகளைப் பதிவிடுவதிலும், சமூகப்பிரச்னைகளுக்கு எதிராக குரலற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதிலும் முக்கியமானவர், நடிகர் சித்தார்த்.
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
குறிப்பாக, டெல்லியில் தொடர்ந்த விவசாயிகள் போராட்டம், கரோனா இரண்டாவது அலையின்போது நிலவிய தடுப்பூசித் தட்டுப்பாடு, ஊரடங்கில் மக்கள் பட்ட துயர் ஆகியவை குறித்து ட்விட்டரில் தொடர்ந்து பேசி வருகிறார், நடிகர் சித்தார்த்.
இதனாலேயே அண்மையில் பாஜகவினர் சிலர், இவரது குடும்பத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்தனர்.
தொடர்ந்து சித்தார்த்துக்கு நிகழும் அவலம்
அதுமட்டுமின்றி, தனது ட்விட்டர் பக்கம் 5 முறை ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய ட்வீட்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் சித்தார்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.