தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிபிராஜ் படத்தில் இணையும் அட்டகத்தி நாயகி - மாயோன், வால்டர், ரேஞ்சர்

சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

SibiRaj

By

Published : Oct 23, 2019, 9:17 AM IST

நடிகர் சத்யராஜின் மகனும் இளம் நடிகருமான சிபிராஜ் ஸ்டூடன்ட் நம்பர் 1 திரைப்படம் மூலம் அறிமுகமானார். அவர் நடிப்பில் வெளியான ஆரம்பகால படங்களான ஜோர், வெற்றிவேல் சக்திவேல் உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகி பேசப்பட்ட படம் லீ. இந்த படத்தை பிரபு சாலமன் இயக்கியிருந்தார். அதற்கு பிறகு வெளியான நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை, சத்யா உள்ளிட்ட படங்கள் வெற்றியடைந்த நிலையில், கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார் சிபிராஜ்.

தற்போது அவர், மாயோன், வால்டர், ரேஞ்சர் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் நிலையில், புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'காவலுதாரி' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இந்தப்படத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சத்யராஜ்-சிபிராஜ்

இந்தப்படத்தில் அட்டகத்தி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நத்திதா ஸ்வேதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நத்திதா நடித்துள்ளார். சிபிராஜுடன் நந்திதா நடிக்கும் புதிய படத்தை சத்யா திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். சைமன் கிங் இசையமைக்கிறார்.

நந்திதா ஸ்வேதா

இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க...

எனக்கு பிஸ்டலே பிகிலு போல - பிஸ்டலுடன் மாஸ் காட்டும் 'தல'

ABOUT THE AUTHOR

...view details