சிபிராஜ் தனது ‘மாயோன்’ படத்துக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ், தன்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘மாயோன்’. பல்வேறு கோயில்களின் பின் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் திரில்லர் திரைப்படம் இது என கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்புதான் இதன் படப்பிடிப்பு பணி முடிந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.