தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விவேக்கின் கனவை நம்மால் நிறைவேற்ற முடியும் - சிபிராஜ் - விவேக் மரணம்

விவேக்கின் கனவுகளை நாம் அனைவரும் நிறைவேற்ற முடியும் என்று நடிகர் சிபிராஜ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Sibi
Sibi

By

Published : Apr 17, 2021, 3:29 PM IST

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவுக்குத் திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு நடிகராக அவர் விட்டுச்சென்ற இடத்தை யாரும் நிரப்ப முடியாவிட்டாலும் அவருடைய கனவுகளை நாம் அனைவரும் நிறைவேற்ற முடியும். அவரின் ஒரு கோடி மரங்கள் நடும் இலக்கில் 33 லட்சம் மரங்களை அவர் நட்டுவிட்டார்.

நாம் அனைவரும் மனதுவைத்தால் அந்த ஒரு கோடி இலக்கை வெகு சில நாள்களிலேயே அடைந்துவிட முடியும். அதுவே நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையாகும்" எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details