நடிகர் சத்யராஜின் மகனும் இளம் நடிகருமான சிபிராஜ் 'ஸ்டூடன்ட் நம்பர் 1' திரைப்படம் மூலம் அறிமுகமானார். அவர் நடிப்பில் வெளியான ஆரம்பகால படங்களான 'ஜோர்', 'வெற்றிவேல் சக்திவேல்' உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகி பேசப்பட்ட படம் 'லீ'. இந்த படத்தை பிரபு சாலமன் இயக்கியிருந்தார். அதற்கு பிறகு வெளியான 'நாய்கள் ஜாக்கிரதை', 'ஜாக்சன் துரை', 'சத்யா' உள்ளிட்ட படங்கள் வெற்றியடைந்த நிலையில், குறிப்பிட்ட சில கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் சிபிராஜ். தற்போது அவர், 'மாயோன்', 'வால்டர்', 'ரேஞ்சர்', 'கபடதாரி' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.
தீரன் என் புள்ள...! 'வால்டர்' சிபிராஜின் வாழ்த்து ட்வீட்! - டேக்வாண்டா தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் 2019
நடிகர் சிபிராஜ் மகன் தீரன் தற்காப்பு கலை போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இதனையடுத்து, சிபிராஜின் மகன் தீரன் தற்போது புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ என்னும் தற்காப்பு கலை போட்டியில் பங்குகேற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வாங்கியுள்ளார். இதனை சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், எனது மகன் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சந்தோஷத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவுக்கு நெட்டிசன்களும் ரசிகர்களும் தீரனை வாழ்த்தி வருகின்றனர்.
திரை பிரபலங்கள் திரையில் சாதனைகள் புரிந்து வரும் வேளையில் அவர்களுது வாரிசுகள் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் மகள் பேட்மிண்டன் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை புரிந்தார். அதேபோல் மாதவன் மகன் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.