மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை ஸ்ருதிஹாசன்,
"பெண்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதற்காக தற்போதும் போராட்டங்கள், பேரணிகள் நடத்துகின்றனர். அவர்கள் தங்களது பாதுகாப்பு, சம உரிமைக்காக இவற்றை மேற்கொள்வது விசித்திரமாக உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இவற்றால், பெண்களுக்கான பிரச்னைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை.