டெல்லி: ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் டப்பிங் பேசவுள்ளார்.
தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக 'லாபம்' படத்தில் நடித்து வருகிறார், நடிகை ஸ்ருதிஹாசன். இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து வரும் இவர், தற்போது ஹாலிவுட் சூப்பர் ஹிட் அனிமேஷன் திரைப்படமான 'ஃப்ரோசன் 2' படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு டப்பிங் பேசவுள்ளார்.
இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரமாக எல்சா - ஆனா என சகோதரிகளின் கதாபாத்திரங்கள் இருக்கின்றன. இதையடுத்து எல்சா கதாபாத்திரத்துக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் டப்பிங் பேசவுள்ளார். அத்துடன் படத்துக்காக மூன்று பாடல்களும் பாடவுள்ளார்.
இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது, 'எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று ஃப்ரோசன். அனிமேஷன் படமாக இருந்தாலும் இதில் சகோதரிகளாகத் தோன்றும் எல்சா - ஆனா கதாபாத்திரம் மனதை உருகச் செய்யும். ஒரு அக்காவாக எல்சா கேரக்டர், தங்கை ஆனா மீது காட்டும் பாசத்தைப்போன்று நான் என் தங்கையிடமும் வெளிப்படுத்துவேன்.